கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி, அருள் விக்னேஷின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கியுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அளித்த புகார் தொடர்பான வழக்கில் போலீசாரின் அடுத்தகட்ட நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
