சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக நுழைவாயிலில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டபோது, அங்கு வந்த சேகர்பாபு அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் அவமரியாதையாகப் பேசுதல் ஆகிய இரண்டு சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் அவர் மீது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது போலீசார் வழக்கு பதிவு
