முதலமைச்சர் விஜய் முழுநேர அரசியலில் களமிறங்கியதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பாரா என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுந்து வந்தது. இந்நிலையில், சினிமாவில் இருந்து விஜய் விலகியது குறித்தும், அவரது எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் அவருடைய தாயாரும் பிரபல பின்னணிப் பாடகியுமான ஷோபா சந்திரசேகர் ஊடகப் பேட்டி ஒன்றில் முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
சினிமாவில் இருந்து முதல்வர் விஜய் விலகியது குறித்து அவரது தாயார் ஷோபா மனம்திறந்து பேசியுள்ளார். ஊடக பேட்டியில், சினிமா & அரசியல் இரண்டையும் ஒன்றாக கவனிக்குமாறு நாங்கள் (பெற்றோர்) அறிவுறுத்தினோம். ஆனால், அவர் ஒரு துறையில் மட்டுமே கவனம் செலுத்த விரும்பினார். அது அவரது முடிவு என்று நாங்களும் எதுவும் சொல்லவில்லை என்றார். மீண்டும் விஜய் படங்களில் நடிப்பார் என கூறப்பட்ட நிலையில் இவ்வாறு பேசியுள்ளார்.
