Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆட்டம், பாட்டத்துடன்……நாகை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா….

நாகப்பட்டினத்தில் உள்ள EGS பிள்ளை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி போராசியர்கள் கலந்துகொண்டனர். பொங்கல் விழாவை முன்னிட்டு  சூரியபகவானுக்கு படையலிட்டு பூஜைசெய்த  மாணவ, மாணவிகள் கரும்புகள் கொண்டு அலங்கரித்து, தோரணங்கள் கட்டி புதுப்பானையில் பொங்கல் வைத்தனர். அதனை தொடர்ந்து மண் பானையில் வைக்கப்பட்ட பொங்கல் பொங்கிவர அனைவரும் பொங்கலோ பொங்கல்! என்று உற்சாகத்துடன் சமத்துவ பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.
சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு கட்டக்கால் ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் குத்தாட்டம் போட்டு மகிழ்ச்சி பொங்க ,பொங்கலை கொண்டாடினர். சமத்துவ பொங்கல் விழாவில் கல்லூரியில் படிக்கும் அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டது தங்களுக்கு மகிழ்ச்சியளித்திருப்பதாகவும், மேலும் தமிழின கலாசாரப்படி பெண்கள் புடவையிலும், ஆண்கள் வேட்டி அணிந்தும்  இவ்விழாவில் கலந்துகொண்டது பெருமையாக இருந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!