பொன்மலையில் மீண்டும் கொலை .. பதற்றம்..

703
Spread the love

திருச்சி பொன்மலையை அடுத்த மேலகல்கண்டார் கோட்டை அர்ஜுனன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் மணிவாசகன் (21). இவர் கறிக்கோழி லாரியில் லோடுமேனாக  வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு  மேலகல்கண்டார் கோட்டை ஆலத்தூர் பாலத்தின் அருகே மணிவாசகன் நடந்து சென்ற போது அங்கு வந்த 10 பேர் கொண்ட மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மணிவாசகனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்தால் மட்டுமே நாங்கள் உடலை எடுக்க விடுவோம் என வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம் என உறுதி அளித்ததால் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
 இந்த சம்பவம் தொடர்பாக பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணிவாசகத்திற்கும் அதேப்பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.. இதன் அடிப்படையில் இக்கொலை நடந்திருக்கலாம் என தெரிகிறது.. எனினும் மீண்டும் பொன்மலை பகுதியில் நடந்துள்ள கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

LEAVE A REPLY