க.பொன்முடி மற்றும் மு.பெ.சாமிநாதன் ஆகியோருக்கு திமுக துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் இருவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பு வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக பணியாற்றி வந்த மு.பெ.சாமிநாதன் அவர்கள் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக திரு. இல.பத்மநாபன் (நெ.) 4/666, சைட் எண். 103, கிருஷ்ணா நகர், விவேகானந்தா வித்யாலயா பள்ளி எதிரில், தாராபுரம் சாலை, கோவில் வழி, திருப்பூர் – 641608 ) அவர்கள் திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராகவும்; திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த திரு. இல.பத்மநாபன் அவர்கள், திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக, திரு. கே.ஈஸ்வரசாமி, எம்.பி., (நெ. 1428ஏ, கருப்புசாாமிபுதூர், மைவாடி அஞ்சல், மடத்துக்குளம் தாலுக்கா, திருப்பூர் மாவட்டம்.) அவர்கள் திருப்பூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

