Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இது விருத்தாச்சலம் மக்களின் வெற்றி” – வாக்காளர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் உருக்கமான நன்றி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் களம் கண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 10 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு இதுவே ஒரே வெற்றியாகும். விருத்தாச்சலத்தில் கிடைத்துள்ள இந்த வெற்றியால் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில், விருதாச்சலம் மக்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
விருத்தாச்சலம் மக்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
சட்டமன்றத் தேர்தல் 2026 இல், விருத்தாச்சலம் தொகுதியில் எனக்கு வழங்கிய மகத்தான வெற்றி உங்கள் அன்பும் நம்பிக்கையும் காட்டுகிறது. இந்த வெற்றி என் தனிப்பட்ட வெற்றி அல்ல இது நம் அனைவரின் வெற்றி.
என்னை நம்பி வாக்களித்த ஒவ்வொரு வாக்காளருக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்புடன், உங்கள் குரலாக சட்டமன்றத்தில் செயல்பட உறுதியளிக்கிறேன்.
விருத்தாச்சலம் வளர்ச்சி, மக்கள் நலன் இதுவே என் முன்னுரிமை.
முரசு கொட்டட்டும்
விருதாச்சலத்தில் உங்கள் அண்ணியார் உங்களுக்காக உங்களுடன்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!