சென்னையில் உள்ள தமிழக தலைமைச் செயலகத்தில் மின்வெட்டு ஏற்பட்டதால், அமைச்சர்களின் அறைகள் அமைந்துள்ள முதல் தளம் முழுவதும் இருளில் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முழுவதும் தொடர் மின்வெட்டு எற்பட்டு மக்கள் போராடி வரும்

நிலையில், மின்வெட்டு கிடையாது என அமைச்சர்கள் விளக்கம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், அரசு நிர்வாகத்தின் முக்கியப் பணிகள் நடைபெறும் தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட இந்த மின்தடை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
