தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருச்சி மன்னார்புரம் செயற்பொறியாளர் எம் .கணேசன் கூறியிருப்பதாவது… திருச்சி கிழக்கு கோட்டம், மணிகண்டம் துணை மின் நிலையத்தில் இன்று (14.07.2026) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை தென்றல் நகர், நாகமங்கலம், ஆலம்பட்டி, எசனப்பட்டி, முடிகண்டம், மணிகண்டம், பாகனூர், நேருஜி நகர், செங்குறிச்சி, தீரன்மாநகர் மலர்நகர், மேக்குடி, மாத்தூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
