தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் சுமார் 20 லட்சம் மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க இருப்பதை அடுத்து, முன்னதாக இன்று பிளஸ்2, பிளஸ்1 வகுப்புகளுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்குகின்றன.
ஒவ்வொரு 5 மையத்துக்கும் அவசர காலங்களில் உதவும் வகையில் களப்பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும். பள்ளி அதிகாரிகளுடன் இணைந்து செயற்பொறியாளர் ஆய்வு செய்ய வேண்டும். தேர்வு நேரத்தில் பராமரிப்புக்கான மின்தடை மேற்கொள்ளக் கூடாது . மாணவர்கள் படிப்பதற்கு தடையில்லாத வகையில் இரவு நேரங்களிலும் தடையின்றி மின்சாரம் வழங்கவேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.
