Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாடியிலிருந்து குதித்த கல்லூரி மாணவி- அண்ணன், தம்பி கைது

காதலிக்க வற்புறுத்தல்-மாடியிலிருந்து குதித்த கல்லூரி மாணவி-அண்ணன், தம்பி கைது

சென்னையை அடுத்த பூந்தமல்லியை சேர்ந்தவர் ரோகித் (19). கல்லூரி மாணவரான இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ரோகித்தின் நடத்தை சரியில்லாததால் கடந்த சில மாதங்களாக அந்த மாணவி, ரோகித்துடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரோகித், தனது அண்ணன் விக்னேஷ் (20) என்பவருடன் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று மீண்டும் தன்னை காதலிக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் மனமுடைந்த மாணவி, திடீரென வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயம் அடைந்த மாணவியை, குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது…. இதுகுறித்த புகாரின்பேரில், பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசார் ரோகித் மற்றும் அவரது அண்ணன் விக்னேஷ் ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டம் மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

error: Content is protected !!