Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொரியின் விலையும் கிடுகிடு உயர்வு… மக்களுக்கு அடுத்த ஷாக்

பொரியின் விலையும் கிடுகிடு உயர்வு... மக்களுக்கு அடுத்த ஷாக்

ஆயுத பூஜையை முன்னிட்டு பொரி தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கடுமையான அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொரி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு 100 லிட்டர் பொரி மூட்டை ரூ.380-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ.90 உயர்ந்து 470 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.

பொரி தயாரிப்பதற்கு தேவையான நெல் மற்றும் பொரி அரிசியின் விலை இந்த ஆண்டு (2026) கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே சந்தையில் அரிசி விலை மூட்டைக்கு ரூ.300 முதல் ரூ.600 வரை அதிகரித்துள்ளதே இந்த திடீர் விலை உயர்வுக்கு முதன்மைக் காரணம் என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உற்பத்திச் செலவு, தொழிலாளர் கூலி மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றால் பொரியின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், விலை உயர்வு காரணமாக பண்டிகை கால விற்பனை பாதிக்கப்படலாம் என சில்லறை வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!