Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பூசாரிக்கு கத்தி குத்து -2 பேர் கைது- திருச்சி க்ரைம்

பொன்மலையில் பரபரப்பு சம்பவம் -குழந்தைகள் இல்லத்தில் இருந்து சிறுவன் மாயம்

திருச்சி கொட்டப்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியில் குழந்தைகள் காப்பகம் உள்ளது.இதில் வட மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தங்கி இருந்தார்.
இவர் செவித்திறன் மற்றும் பேச்சுத் திறன் அற்றவர். இந்நிலையில் கடந்த 25 ந்தேதி சிறுவன் அங்குள்ள காப்பகத்தின் சுற்றுச் சுவரில் ஏரி குதித்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் அவரை பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து குழந்தைகள் காப்பகத்தை சேர்ந்த தினேஷ் பாபு என்பவர் பொன்மலை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன 16 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.

பழக்கடை பெண் ஊழியரின் கணவர் மாயம்

திருச்சி செப் 28 திருவரங்கம் மேலூர் ரோடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 45) என்பவர் கடந்த 22 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் விடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து திருவரங்கத்தில் உள்ள பழக்கடையில் வேலை பார்க்கும் அவருடைய மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன செல்வராஜை தேடி வருகின்றனர்.

திருச்சியில் வாலிபரிடம் பணம் பறிக்க முயன்ற ரவுடி கைது

அரியலூர் மாவட்டம் குடிகுடிய குடி கிராமத்தை சேர்ந்தவர் விமல் ராஜ் (வயது23) இவர் நேற்று குழுமாயி அம்மன் கோவில் அருகில் பழக்கடை அருகில்நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது மர்ம ஆசாமி ஒருவர்விமல் ராஜ் அருகில் வந்து கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றுள்ளார். இது குறித்து விமல் ராஜ் அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்துக்கு கிடமாக ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் பெயர் பாண்டியன் (வயது 26), புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் என்பதும், இவர் தான் விமல் ராஜ்யிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்தது என்று தெரிய வந்தது. இதை எடுத்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்தனர்.

பூசாரிக்கு கத்தி குத்து -2 பேர் கைது

திருச்சி திருவானைக்காவல் சீனிவாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் ( 32) இவர் கோவில் பூசாரி. சம்பவத்தன்று இவர் நேற்று முன்தினம் தனது அத்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது அவர் அம்பேத்கர் நகர் பகுதியில் வந்த பொழுது அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் (வயது 21) பாரதி (வயது 21) ஆகிய 2 பேர் சேர்ந்து சதீஷ்குமாரை வழி மறித்து அவரிடம் செலவுக்கு பணம் கேட்டு உள்ளனர். சதிஷ் குமார் பணம் தருவதற்கு மறுப்பு தெரிவித்தத்தை தொடர்ந்து கத்தியால் கீறி
விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவத்தில் காயம் அடைந்த சதீஷ்குமார் திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகுமார், பாரதியை கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!