திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள புரோகிதர்கள் தங்களை முன்னறிவிப்பின்றி வெளியேற சொல்வதாக சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள புரோகிதர்கள் தங்களை முன்னறிவிப்பின்றி வெளியேற சொல்வதாக கூறி இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தை சுற்றிலும் அத்துக்கள் நடுவதற்கு இந்து அறநிலையத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது அம்மா மண்டபத்தில் உள்ள புரோகிதர்கள் காலம் காலமாக நாங்கள் இங்கு இருந்து புரோகிதம் தொழிலை செய்து வருகிறோம். எங்களை இங்கிருந்து வெளியேற்றுவதற்கான வேலையை இந்து அறநிலையத்துறை செய்து வருகிறது எனக் கூறினர் மேலும் இந்து முன்னணி சார்பில் மாவட்டச் செயலாளர் சப்தரிஷி உட்பட நான்கு நபர்களுடன் அம்மா மண்டபம் மெயின் ரோட்டில் அமர்ந்து புரோகிதர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் அதன் பின்னர் காவல்துறையினர் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மற்றும் மூன்று நபர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். காவல்துறை வந்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
