ராமநாதபுரம் மாவட்டத்தில் மனைவியை கொலை செய்த வழக்கில் கைதான நபரை சிறைக்கு அழைத்து சென்றபோது தப்பிச் சென்றவர் மீண்டும் கைதானார். தலைமறைவாக இருந்த கைதியை போலீசார் பரமக்குடியில் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, கைதி தப்பிய விவகாரத்தில் கவனக்குறைவாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தினகரன் மற்றும் ஏட்டு நீலாவதி ஆகியோர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
