தேனி தேக்கம்பட்டி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய நிலையில், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் வெளியூர்களுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க அனைத்து சோதனைச் சாவடிகள் மற்றும்

நிலையங்களுக்குப் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தீவிர வாகனத் தணிக்கை மற்றும் தேடுதல் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டச் சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகள், காவலர்களைத் தாக்கியது மட்டுமின்றி அவர்களில் ஒருவர் அணிந்திருந்த தங்கச் செயினையும் பறித்துச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், 200 கைதிகள் மட்டுமே அடைக்கும் வசதி கொண்ட அச்சிறையில் 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களைக் கண்காணிக்க வெறும் 4 காவலர்கள் மட்டுமே பணியில் இருந்ததாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
