கடலூர் மாவட்டம், வடலூர் அருகே தனியார் பஸ், வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்துள்ளனர். விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக ஏரியில் கவிழாமல்

நூலிழையில் வேன் தப்பியது. பஸ்சும் வேனும் மோதிய விபத்தில் 25 பெண்கள் உட்பட 30 பேர் காயம் அடைந்துள்ளனர். உடனடியாக காயம் அடைந்த 30க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

