Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தனியார் சட்டக் கல்லூரி மாணவிகள் 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம்

தனியார் சட்டக் கல்லூரி மாணவிகள் 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில் இயங்கி வரும் தனியார் சட்டக் கல்லூரியில், அனுமதிக்கப்பட்ட இடங்களை விடக் கூடுதலாக 36 மாணவிகள் சேர்க்கப்பட்டு, தற்போது அவர்கள் பல்கலைக்கழகத் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டித்தும், தங்களது எதிர்காலத்தை உறுதி செய்யக் கோரியும் பாதிக்கப்பட்ட மாணவிகள் இன்று இரண்டாவது நாளாகக் கல்லூரி வளாகத்திற்குள் தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் தாங்கள் பருவத் தேர்வுகளை எழுத முடியாத சூழல் உருவானதை அறிந்த 36 மாணவிகளும் அதிர்ச்சியடைந்தனர். தங்களுக்கு உடனடியாகத் தேர்வெழுத அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்றும், முறைகேடாகச் சேர்க்கை நடத்திய கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நேற்று போராட்டம் தொடங்கினர். நியாயமான தீர்வு கிடைக்காத நிலையில், இன்று 2-வது நாளாகக் கல்லூரி வளாகத்திலேயே அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் கல்வி அதிகாரிகள் பேச்சுவார்த்தை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!