ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், பிணை கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் நடந்து வருவதாகவும், ரஷியாவை பேச்சுவார்த்தை மேசையிலிருந்து விலக செய்யும் எந்தவொரு செயலையும் தான் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இந்த போரை தொடரவே விரும்புவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா போர் அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்- டிரம்ப்
