Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராகுல் வழக்குப்பதிவுக்கு எதிராக திருச்சியில் போராட்டம்!

ராகுல் வழக்குப்பதிவுக்கு எதிராக திருச்சியில் போராட்டம்!

ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் – கிறிஸ்டோபர் திலக் எம்பி பங்கேற்பு.

உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கூட்டத்திற்குப் பின் நடத்தப்பட்ட சுத்திகரிப்பு யாகம் குறித்து கருத்து தெரிவித்த, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் சமத்துவத்திற்கு எதிரான இத்தகைய பாசிச போக்கை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியார் சிலை அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தேசிய பொது செயலாளர் விச்சு (எ) லெனின் பிரசாத், திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் உள்பட காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து எம்பி கிறிஸ்டோபர் திலக் செய்தியாளர்களிடம் பேசினார். அதில்:–

சமூக நீதி புரட்சி வந்த பிறகும் இது போன்ற ஒரு கேடுகெட்ட செயலை பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பல் செய்துள்ளது. இந்த செயலை செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து ராகுல் காந்தி பேசியதற்கு அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து வம்புக்கு இழுத்துள்ளனர். பாஜக அரசு மனுவை தூக்கிப் பிடிக்கும் கட்சி என்பதற்கு இது ஒரு உதாரணம். 200, 300 வருடத்திற்கு முன்பு ஆக்ரோஷமாக இருந்த ஜாதி கட்டமைப்பை ஏதாவது ஒரு வகையில் புகுத்தலாம் என்ற வகையில் பாஜக முயற்சி செய்து வருகிறது. முதன் முதலில் தீண்டாமை ஒழிப்பை கையில் எடுத்தது காங்கிரஸ் கட்சி தான். பின்னர் அம்பேத்கர் வந்த பிறகு அதனை சட்டத்தின் மூலமாக எவ்வாறு மாற்றுவது என்பது குறித்து எடுத்துரைத்தார். காங்கிரஸ் கட்சி கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு இதற்காக பல போராட்டங்களை செய்துள்ளது. இந்த கட்சியின் தலைவருக்கே இது போன்ற ஒரு பிரச்சனை என்றால், சராசரி தலித் சமுதாய மக்களுக்கு என்னவெல்லாம் நடக்கும்? என கேள்வி எழுப்பினார்.

error: Content is protected !!