Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாதிவாரி கணக்கெடுப்பு கோரி- திருச்சியில் தவெக ஆர்ப்பாட்டம்..

ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த கோரியும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து ஒருங்கிணைந்த தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது.
இதில் தலைமை கழக பரப்புரை பேச்சாளர் நாஞ்சில் சம்பத் டெல்டா மாவட்ட தேர்தல் குழு கண்காணிப்பாளர் முன்னாள் அமைச்சர்


கு.ப கிருஷ்ணன் ,கொள்கை பரப்புத் இணை செயலாளர் பேராசிரியர் சம்பத்குமார் முன்னிலை வகுத்து சிறப்புரையாற்றினர்
.
திருச்சி மாவட்ட தேர்தல் பிரச்சார குழு உறுப்பினர் பிச்சைரத்தினம் கரிகாலன், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் மு.சந்திரா, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் மோகன், திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ்வரன்,


திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் அருள்விஜய் ,திருச்சி புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் மு.ரவிசங்கர், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கதிரவன் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மணப்பாறை நேருதாசன்,வழக்கறிஞர் ஜான் ரஸ்கின் உள்பட


500 மேற்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!