செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈசூர் மற்றும்
பூதூர் பகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மரகத குமரவேல் தனது முதற்கட்ட தேர்தல் பரப்புரையினை தொடங்கினார்.
அப்போது அப்பகுதி பொதுமக்கள் எங்கள் பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை கடுமையான குடிநீர் தட்டுப்பாடு மின்சார பற்றாக்குறை என
பொதுமக்கள் சரமாரியான கேள்வி எழுப்பினர். இதனால் அங்கிருந்து மரகதம் குமரவேல் பரப்புரையை நிறுத்திக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
