Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மின்மாற்றி பழுதால் பொதுமக்கள் அவதி-காலி குடங்களுடன் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல கஞ்சா நகரம் கிராமத்தில் மின்மாற்றி பழுது ஏற்பட்டுள்ளது.
மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்த வந்தனர். மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மின்மாற்றி பழுது நீக்கம் செய்யப்பட்டது. ஆனால் மின்சாரம் வழங்கப்படாததால் இன்று காலை குடிநீர் பிடிக்க முடியாமல் தவித்த பொதுமக்கள் காலி குடங்களுடன் கஞ்சா நகரம் மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த செம்பனார்கோவில் போலீசார், மின்சாரத் துறையினர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். மின் இணைப்பு வழங்கப்பட்டது. அந்த பகுதியில் 20 நிமிடங்கள்வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

error: Content is protected !!