Skip to content
Home » அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்… புதுகை மக்களுக்‌கு அழைப்பிதழ்…

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்… புதுகை மக்களுக்‌கு அழைப்பிதழ்…

  • by Senthil

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி பார்லிமெண்ட் தொகுதி இணை அமைப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்  புதுக்கோட்டை நகர் சந்தைப்பேட்டையில் உள்ள  பூத் எண் 87 குடியிருப்பு பகுதிகளில் நாதஸ்வர மேளதாள குழுவினருடன் பழங்கள் தேங்காய்பழம் வெற்றிலை பாக்கு சகிதமாய் வீடு வீடாக சென்று அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ்களை வழங்கி ஜனவரி 22ம்தேதி வீடுதோறும் விளக்கேற்றும்படி கேட்டுக்கொண்டார்.

புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு

மாவட்ட பொது செயலாளர்கள் ஏவிசிசி கணேசன்,குருஶ்ரீராம்,நகர தலைவர் லெட்சுமணன் முன்னிலை வகித்தனர். தரவு மேலாண்மை மாநில செயலாளர் கார்த்திகேயன், உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், நகர நிர்வாகிகள் இளங்கோ, தர்மராஜ்,பத்மாவதி மற்றும் பூத்கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கிளைத்தலைவர் ராஜேந்திரன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!