Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளுக்கு சீல்… எஸ்பி அதிரடி

புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் காவல் சரகத்திற்குட்பட்ட லெம்பலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மவுண்ட் சீயோன் CBSE பள்ளி வளாகத்தின் 100மீ தூரத்தில் உள்ள அழகுபெட்டிகடை, கணேஷ் பெட்டிகடை மற்றும் லேனாவிளக்கில் உள்ள மகாலெட்சுமி பெட்டிகடையில் நேற்று புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டேவிற்கு கிடைத்த ரகசிய தகவலின்படி போலீசார்களுன் சென்று அதிரடியாக சோதனை செய்தபோது

அரசால் தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை சட்ட விரோதமாக பள்ளிக்கு அருகில் விற்பனை செய்ததால் 3 பெட்டிகடைகளிலும் 1).Cool lip 2).Hans 3).Ganesh 4). Vimal 5).V1 ஆகிய அரசால் தடைசெய்யபட்ட சுமார் 3.5Kg புகையிலை பொருள்கள் கைப்பற்றினர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த 03 கடைகளுக்கு புதுக்கோட்டை எஸ்பி வந்திதா பாண்டே  முன்னிலையில் உணவு பாதுகாப்புதுறை அலுவலரால் அபராதம் விதிக்கபட்டு சீல் வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!