Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காதலுக்கு எதிர்ப்பு……புதுகை வாலிபர் வெட்டிக்கொலை

புதுக்கோட்டை மச்சு வாடி விஸ்வநாததாஸ் நகர்பகுதியில் வசித்து வருபவர் ஒச்சு கார்த்திக் (25), கட்டிட தொழிலாளி. நேற்று அந்த பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தார். நேற்று  மாலை அதே பகுதியை சேர்ந்த 3 பேர்  அங்கு வந்து கார்த்திக்கை  அரிவாளாளால் சரமாரியாகவெட்டிகொலைசெய்துவிட்டு  தப்பி ஓடிவிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  வந்த எஸ்.பி.வந்திதாபாண்டே,டி.எஸ்,பி.ராகவி ஆகியோர் விரைந்து விசாரணை நடத்தினர். திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி  விசாரணை நடத்தினர்.

கொலையாளிகளில் ஒருவனுக்கும், இன்னொரு பெண்ணுக்கும் காதல் இருந்தது வந்ததாம். இதை கார்த்திக் கண்டித்து உள்ளார். இதனால் ஏற்பட்ட விரோதத்தில் காதலன் தனது கூட்டாளிகள் 2 பேருடன் வந்து கொலை செய்து விட்டு தப்பினார். 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!