Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை அதிமுக அலுவலகம் எடப்பாடி வசம்…சாவி ஒப்படைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவியை வகித்து வந்தார். இந்நிலையில் சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் எடப்பாடியையும் மீறி சி.விஜயபாஸ்கர் உட்பட 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனால் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பதவி புதுக்கோட்டை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளராக இருந்த பழனிவேலிடம் ஒப்படைக்கப்பட்டது. பழனிவேல் புதுக்கோட்டை அதிமுக அலுவலகத்திற்கு வருகை தந்த போது சி.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் புதுக்கோட்டையில் அதிமுக அலுவலகம் கடந்த 15 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டு எந்த தரப்பினரையும் அதிமுக அலுவலகத்திற்குள் அனுமதிக்காமல் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

புதிய அதிமுக மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்ட பழனிவேல் புதுக்கோட்டை மாவட்ட காவலர் கண்காணிப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அதிமுக அலுவலகத்திற்கு செல்ல மனு கொடுத்தார்.

error: Content is protected !!