Skip to content
Home » கர்நாடகா…புலிகேசி அதிமுக வேட்பாளர் திடீர் வாபஸ்…பரபரப்பு தகவல்

கர்நாடகா…புலிகேசி அதிமுக வேட்பாளர் திடீர் வாபஸ்…பரபரப்பு தகவல்

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 10ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அதிமுகவும் போட்டியிடும் என எடப்பாடி அறிவித்தார். அதன்படி பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட புலிகசேி நகர் தொகுதியில்  அதிமுக வேட்பாளராக கர்நாடக மாநில அதிமுக அவைத்தலைவர்  அன்பரசன் அறிவிக்கப்பட்டார். அவரும் வேட்புமனு  தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் இன்று வேட்புமனுவை வாபஸ் வாங்க கடைசி நாள். இன்று  அதிமுக வேட்பாளர்  அன்பரசன் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இது குறித்து அதிமுக தலைமைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பாஜக மேலிட தலைவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க  புலிகேசி நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்களும் வாபஸ் பெற்று விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!