புதுக்கோட்டை அருகே பஸ்ஸில் இருந்து மாணவிகளை கீழே தள்ளிவிட்டது மனிதநேயம் அற்ற கொடூர செயல் என கனிமொழி தெரிவித்துள்ளார். தனது X பதிவில், கல்வி கற்கும் குழந்தைகள் மீது தீண்டாமை கொடுமையை நிகழ்த்தும் அளவுக்கு, சாதி என்னும் மனநோயால் இச்சமூகம் இன்னும் பாதிக்கப்பட்டிருப்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம் எனவும் கூறினார். இதற்கிடையே சம்பந்தப்பட்ட டிரைவர் & கண்டக்டர் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
