Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற புஷ்பவனம் குப்புசாமி

முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற புஷ்பவனம் குப்புசாமி

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள புஷ்பவனம் குப்புசாமி, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டத்தை சேர்ந்த இசை கலைஞர் புஷ்பவனம் குப்புசாமிக்கு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பதவிகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய குப்புசாமி, “தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராக என்னை நியமித்த தமிழக அரசுக்கும் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன், கிராமிய கலைஞர்களின் வாழ்வாதாரத்தை

உயர்த்தவும், அவர்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன். இயல், இசை, நாடகம் என எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நலிந்த கலைஞர்களுக்கு கரம் கொடுத்து அவர்களை உயர்த்துவோம், கலைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.” என்றார்.

error: Content is protected !!