Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக கவர்னராக மார்ச் 12ல் பதவியேற்கிறார் ஆர்.வி.ஆர்லேகர்

தமிழக ஆளுநராக இருந்த ஆா்.என். ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடா்ந்து, கேரள ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் தமிழக ஆளுநா் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என கடந்த மார்ச் 5ம் தேதி குடியரசுத் தலைவா் உத்தரவிட்டார்.

இந்நிலையில், வரும் 12ம் தேதி முற்பகல் சுமார் 12 மணியளவில், RV. ஆர்லேகர் பதவியேற்கிறார். அவருக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ. தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். ஆா்.வி.ஆா்லேகா் வரும் 11-ஆம் தேதி சென்னைக்கு வருகிறார். அதே நாளில் கடந்த நாலரை ஆண்டுகளாக தமிழக ஆளுநராக இருந்த ஆா்.என்.ரவி, தமிழக ஆளுநா் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச் செல்கிறார். அவரை ஆளுநா் மாளிகை அதிகாரிகளும், ஊழியா்களும் வழியனுப்பி வைக்கின்றனா்.

error: Content is protected !!