மறைந்த முன்னாள் PM ராஜீவ் காந்தியின் 77-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நாளை காங்கிரஸ் கட்சியினர் சத்பவனா திவாஸ் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் இந்நாளில் ராஜீவ் காந்தியின் உயிர் தியாகம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான அவரது செயல்பாடுகள் குறித்து நினைவு கூர்ந்து வருகின்றனர்.
