Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராகுலின் ஒற்றுமை பயணம் நிறைவு…. பொள்ளாச்சியில் வெற்றி விழா …

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை சமீபத்தில் துவக்கினார். இந்த ஒற்றுமைப் பயணத்தை அவர் நேற்று ஸ்ரீ நகரில் நிறைவு செய்தார். ஒற்றுமை பயணத்தின் வெற்றி விழாவாக நாடு முழுவதும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதன்படி பொள்ளாச்சி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதும் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் காந்தி சிலைக்கு மாலை அணிவிது மரியாதை செலுத்தினர். இதில் ராகுல்காந்தி கையெழுத்திட்ட கடிதம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவர் பகவதி, தி.மு.க. நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், ம.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் குகன் மில் செந்தில், கொங்குநாடு தேசிய கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் நித்யானந்தம், ஆதிதிராவிட நலக்குழு மாநில துணைத்தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, ஆதித் தமிழர் விடுதலை முன்னணி நிர்வாகி கோபால் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!