பணி: கிளார்க் கம் டைப்பிஸ்ட் (ஸ்கவுட்ஸ் மற்றும் கெய்ட்ஸ் கோட்டா ரெக்ரூட்மென்ட்-2026-27).
வயது வரம்பு: 01.01.2027 தேதியின்படி 18 முதல் 30க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மொத்த காலியிடங்கள்: 10.
சம்பளம்: 7வது ஊதியக் குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
ஸ்கவுட்ஸ் மற்றும் கெய்ட்ஸ்- தகுதி: மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதியுடன் ஸ்கவுட்ஸ் மற்றும் கெய்ட்ஸ் அமைப்பில் குறைந்தது 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்து பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தேசிய/மாநில அளவில் நடந்த 2 சாரண, சாரணியர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் ஸ்கவுட்ஸ் அண்ட் கெய்ட்ஸ் அமைப்பில் விண்ணப்பதாரரின் அனுபவம், சாதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளுக்குள் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: பொது/ஒபிசியினருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்கள்/ திருநங்கைகள்/சிறுபான்மையினருக்கு ரூ.250/. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.rrcser.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.10.2026.
