Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கனமழை….. சென்னை ஐகோர்ட்டுக்கு இன்று விடுமுறை

மிக்ஜம்  புயல் காரணமாக  சென்னை, காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று  முதல்  விடிய விடிய மழை கொட்டுகிறது. இன்றும் பலத்த காற்றுடன் மழை கொட்டுவதால்  மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்துடன் இன்று சென்னை  ஐகோர்ட் உள்ளிட்ட அனைத்து கோர்ட்டுகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  சென்னை நகரில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளதால் மின்சாரமும் தடை செய்யப்பட்டுள்ளது. விபத்துக்களை தவிர்க்க  மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளதால்  தண்ணீர் வடிந்ததும் மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!