Skip to content

காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை நோக்கி நேற்று நகர்ந்தது.இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (புதன்கிழமை) வலு இழந்து காற்று சுழற்சியாக கிழக்கு காற்றை ஈர்க்கத் தொடங்கும் என்றும், இதனால் தமிழ்நாட்டில் வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) வரை மழைக்கான வாய்ப்பு உள்ளது என்றும்  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தொடர்மழை எதிரொலியாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் மணிகண்டன் அறிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் மழை பெய்து கொண்டே இருக்கிறது. இன்று காலையிலும் மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. எனவே மாவட்டத்தில்  உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி அறிவித்துள்ளார்.

கடலூர் , அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் மழை  பெய்துகொண்டிருப்பதால், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!