Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை அரசு மருத்துவமனையில் மழைநீர் தேக்கம்… கலெக்டர் ஆய்வு

கோவை அரசு மருத்துவமனையில் மழைநீர் தேக்கம்... கலெக்டர் ஆய்வு

கோவையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கி, தரைத்தள வார்டுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன.

இதனால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய மழைநீருடன் கழிவுநீரும் கலக்கும் அபாயம் இருப்பதாக நோயாளிகளின் உறவினர்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும், சக்கர நாற்காலிகள் மற்றும் ஸ்ட்ரெச்சர்களை நகர்த்துவதிலும் சிரமம் ஏற்பட்டது.

இதனால் நோயாளிகளின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் கருத்தில் கொண்டு, தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, கோவை அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர், கனமழையால் பாதிக்கப்பட்ட வார்டுகள் மற்றும் மருத்துவமனை வளாகத்தின் பல்வேறு பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்றவும், பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்து உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்லும் நிலையில், மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்காத வகையில் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே நோயாளிகள் மற்றும் நோயாளிகளுடன் இருக்கும் உறவினர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!