ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளப் பிரிவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ள கோவையைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையில் போயஸ் இல்லத்திற்கு வரவழைத்து ரஜினிகாந்த் கௌரவித்தார். இன்று மாலை முதலமைச்சர் விஜய், சென்னையில் தனியார் ஓட்டலில் வைத்து ஆசிய போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருந்து அளித்து, பரிசுத்தொகை வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வித்யா ராம்ராஜுக்கு ரஜினி நேரில் வாழ்த்து
