Skip to content
Home » இரட்டை இலைக்கு நான் ஓட்டு போட்டது தெரிந்தும்.. கலைஞர் செய்த வேலை… விழாவில் ரஜினி ருசிகரம்..

இரட்டை இலைக்கு நான் ஓட்டு போட்டது தெரிந்தும்.. கலைஞர் செய்த வேலை… விழாவில் ரஜினி ருசிகரம்..

சென்னையில் நடந்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜனிகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது… முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை 1974-ல் இருந்து எனக்கு தெரியும். பிரசார காலங்களில் மு.க.ஸ்டாலினின் பேச்சை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ரசித்த ரசிகர்களில் நானும் ஒருவன். எம்.ஜி.ஆர்., சிவாஜியை தனது எழுத்தால் உச்ச நடிகர்களாக்கினார் கருணாநிதி. மந்திரிகுமாரி, மலைக்கள்ளன் படங்கள் மூலமாக கிடைத்த வருமானத்தை கொண்டு சென்னை கோபாலபுரத்தில் வீடு வாங்கினார். அந்த வீட்டில் தான் இறுதிகாலம் வரை எளிமையாக வாழ்ந்தார். அவரை போல முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினும் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார். கருணாநிதி சினிமாவிலேயே இருந்திருந்தால், இன்னும் பல எம்ஜிஆர் களையும் சிவாஜி களையும் உருவாக்கி இருப்பார். ஆனால் சினிமா உலகம் கொடுத்து வைக்கவில்லை. அவரை அரசியல் எடுத்துக்கொண்டது. தன்னை விமர்சனம் செய்த எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மருத்துவ உதவிக்கு பணம் கொடுத்து உதவி செய்தவர் கலைஞர். தன்னை மிக மோசமாக விமர்சனம் செய்த பத்திரிக்கையாளரை நலம் விசாரித்தே, தலை வணங்கச் செய்தவர் கலைஞர். அந்த பத்திரிகையாளர் பெயர் சோ ராமசாமி. வழக்கமாக கலைஞர் ஒரு நடிகருடன் சேர்ந்து படம் பார்ப்பார். அது தேர்தல் நேரம். அந்த நடிகர் ஓட்டுப் போட்டு விட்டு வெளியே வந்தபோது பத்திரிகையாளர்கள் அவரிடம் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்று கேட்டனர். ‘இரட்டை இலைக்கு’ என்று அந்த நடிகர் சொன்னது அப்போது ட்ரெண்டாகி விட்டது. அன்று மாலை கலைஞருடன்  சேர்ந்து படம் பார்க்க வேண்டும். ஆனால் எப்படி செல்வது என்று தெரியாமல் குளிர் காய்ச்சல் என்று சொல்லிவிட்டார் அந்த நடிகர். ஆனால் அந்த நடிகர் கட்டாயமாக வரவேண்டும் என்று கலைஞர் கூறிவிட்டார். தியேட்டருக்கு சென்றபோது, ‘வாங்க, காய்ச்சல்ன்னு சொன்னீங்களாமே, ‘சூரியன்’ பக்கத்துல உட்காருங்க, குளிர் ஜூரம் போய்டும்’ என்று சொன்னார். அந்த நடிகர் வேறு யாருமல்ல. நான் தான். அவர் அன்று பேசியதை என்னால் மறக்கவே முடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது எனது பாக்கியம். அதனால் தான்  உங்களுக்கு கடவுளை பிடிக்காது.. ஆனால் அந்த கடவுளுக்கே உங்களை பிடிக்கும் என ஒரு விழாவில் நான் கலைஞரை பார்த்து பேசினேன் இவ்வாறு நடிகர் ரஜினி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!