முதல்வர் விஜய்யின் கருணையால் எனக்கு ராஜ்யசபா சீட் கிடைத்துள்ளதாக பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
மாநிலங்களவை தேர்தலுக்கு முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்யசபா காங். வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி, “CM விஜய்யின் பெருந்தன்மை, கருணையால் மாநிலங்களவை வாய்ப்பு கிடைத்துள்ளது. வாய்ப்பை வழங்கிய CM விஜய், காங்கிரஸ் தலைமைக்கு நன்றி. இது ஒரு மிகப்பெரிய பொறுப்பு. தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க என் குரல் ஓங்கும். தமிழக மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன். தமிழ்நாட்டின் கோரிக்கைகளை ராஜ்யசபாவிற்கு எடுத்து செல்வேன்” என்றார்.
