பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “எல்லாப் பிரச்சினைக்களுக்கும் ஒரு தீர்வு உண்டு. அதுபோல் பாமகவில் நிலவும் பிரச்சினைக்கும் தீர்வு வரும். பாமகவை தொடர்ந்து 46 ஆண்டுகளாக கட்சி மற்றும் சங்கம் இரண்டையும் நான் வழிநடத்தி வருகிறேன். அந்த வகையில், சங்கத்தின் தலைவராக பு.த.அருண்மொழியும், கட்சியினுடைய தலைவராக நானும் இருந்து வருகிறோம்.
இவர்கள்தான் பாமகவின் எதிர்கால சட்டமன்ற உறுப்பினர்கள். கட்சியில் அனைத்து அதிகாரங்களும் எனக்கு உண்டு. அதனால்தான், இந்த கட்சியினுடைய தலைவராக பொறுப்பேற்று நல்லவர்களை, வல்லவர்களை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக்குவேன்”
இவ்வாறு அவர் கூறினார்.
