நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவ.5-ம் தேதி வெளியான ‘ராமாயணா: பாகம் 1’ திரைப்படம் வெளியானது முதல் திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வருகிறது. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இப்படம், வெளியான 11 நாட்களில் இந்தியாவில் ரூ.909 கோடியும், வெளிநாடுகளில் ரூ.475.50 கோடியும் என மொத்தம் ரூ.1,384.50 கோடியை வசூலித்து மாபெரும் சாதனை புரிந்துள்ளதோடு, நடிகர் யாஷின் முந்தைய ‘கே.ஜி.எப் 2’ படத்தின் வசூலையும் முறியடித்துள்ளது.
ராமாயணா’ திரைப்படம் : 11 நாளில் 1384 கோடி வசூல்…
