Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

4வது மனைவியின் மகள் பலாத்காரம்…. தந்தைக்கு 31 ஆண்டுகள் சிறை…

திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காமராஜ புரத்தை சேர்ந்தவர் பாரதி (48).கார் டிரைவர் இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளன. இதற்கிடையே வாணியம்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வேறொருவருடைய மனைவியுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நாளடைவில் பாரதி அவரையும் 4வது திருமணம் செய்து கொண்டார். மேலும் 3வது மனைவியின் இரு பிள்ளைகளையும், 4வது மனைவி மற்றும் அவரது பிள்ளைகளுடன் ஒன்றாக இருந்தனர்.இந்நிலையில், 2021ம் ஆண்டு பாரதி, 4வது மனைவியின் 13 வயது‌ மகளை பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார். இது குறித்து தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போக்சோவில் பாரதி கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கு திருப்பத்துார் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இறுதி விசாரணை இன்று நடந்தது. அரசு தரப்பில் மாவட்ட குற்றவியல் வக்கீல் சரவணன் ஆஜரானார். இறுதியில் மாவட்ட நீதிபதி மீனாகுமாரி, குற்றவாளி பாரதிக்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், இதை கட்ட தவறினால் ஒர் ஆண்டு சிறை தண்டனையும், சிறுமியை காயப்படுத்தியதற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், இதை கட்ட தவறினால் 6 மாத சிறைதண்டனையும், மேலும் சிறுமியை மிரட்டியதாக 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்..
error: Content is protected !!