Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மாநகரில் அரியவகை பெண் தேவாங்கு மீட்பு

திருச்சி கே.கே.நகர் அருகே சுந்தர் நகர் 7-வது கிராஸ் பகுதியில், ரவிநாதன் என்பவரது வீட்டின் வாசலில் சுமார் 6 மாத வயதுடைய அரியவகை பெண் தேவாங்கு ஒன்று இருந்தது.
இதனைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில், மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில்

வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தேவாங்கை பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து, மீட்கப்பட்ட தேவாங்கிற்கு பாலக்கரை அரசு கால்நடை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.


சிகிச்சைக்குப் பின்னர், திருச்சி வனச்சரக எல்லைக்குட்பட்ட எம்.ஆர்.பாளையம் காப்புக்காட்டிற்கு தேவாங்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டது. பொதுமக்களின் தகவலால் அரியவகை வன உயிரினம் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மீண்டும் அதன் இயற்கை வாழ்விடத்தில் விடப்பட்டது.

error: Content is protected !!