இன்றைய ராசிபலன்கள்.. 20-2-2023
மேஷம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் பிறக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.
ரிஷபம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள் உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
மிதுனம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் டென்ஷன் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தள்ளிப்போன விஷயங்கள் முடியும். தொழில் உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
கடகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் பல விஷயங்களை நீங்களே பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கனிவாக பழகுங்கள். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி இருக்கும். கவனம் தேவைப்படும் நாள்.


