மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மைசூர் மசாலா தோசை வாங்கி சாப்பிட்ட வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோசைக்குள் சிறிய எலி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை சாப்பிட்ட அவருக்கு, உடல் உபாதை ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து வாடிக்கையாளர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இப்புகாரை தொடர்ந்து அதிகாரிகள் ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஹோட்டலின் உரிமத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.
தோசைக்குள் இருந்த எலி.. மும்பை ஓட்டலில் அதிர்ச்சி சம்பவம்
