Skip to content
Home » தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு …..

தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு …..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவாளூர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் வீரமணி்.இவரது சிலம்பரசன்35 . இவர் லால்குடியில் உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு ரயில் நிலையம் வழியாக பிளாட்பாரத்திலிருந்து தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரயில் சிலம்பரசன் மீது மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!