விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து நடித்துள்ள ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைப்பில் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் வரும் ஆக.28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
