Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கல்வி, மருத்துவத் துறைகளில் வியக்கத்தக்க புதிய திட்டங்கள் விரைவில்

கல்வி, மருத்துவத் துறைகளில் வியக்கத்தக்க புதிய திட்டங்கள் விரைவில்

எதிர்காலத்தில் கல்வித்துறையில் மருத்துவத்துறையில் வியக்கத்தக்க திட்டங்கள் வரப்போகின்றன ஜேசிடி பிரபாகர் நம்பிக்கை

சென்னை திருவொற்றியூரில் பொது வர்த்தக சங்கத்தின் 53 வது ஆண்டு விழாவை நடைபெற்றது

திருவொற்றியூர் வள்ளலார் நெடுஞ்சாலையில் பொது வர்த்தக சங்க கட்டிடத்தில் நடைபெற்ற

நிகழ்ச்சியில்

தமிழக சட்டப்பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகர் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் சமத்துவ மக்கள் கழக தலைவர் நாராயணன் மற்றும் நீதிபதி வேல்ராஜ் உள்ளிட்ட பங்கேற்றனர்

நிகழ்ச்சியில் பொது வர்த்தக சபை ஆண்டு விழாமல் மலரை வெளியிட்டு பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்

தொகையை வழங்கினார்

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகர்

பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் நீதி நியாயத்தை கடைபிடிக்க வேண்டும்

30 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலைப் பார்த்து கேலி செய்தார்கள்

அரசியலுக்கு வந்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் அதனால் குடும்பத்தில் ஒருவரை அரசியல்வாதி ஆககிவிடலாம் என்று கேலி செய்வார்கள்

ஆனால் இன்று ஒரு புதிய யுகம் பிறந்துள்ளது

நான் கடந்த அரசியல்களை பார்த்தவன் அரசாங்கம் என்பது மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்

பொது வர்த்தக சங்கத்தினர் 53 ஆண்டுகளில் எத்தனையோ பிரச்சனைகளை சந்தித்து இருப்பார்கள்

ஒன்றுக்கும் உதவாதவன் கூட மிரட்டி உருட்டுகின்ற காலமெல்லாம் இருந்திருக்கலாம்

ஆனால் இன்று நீதி தவறாமல் ஆட்சி செய்ய வேண்டும் என்று விரும்புகின்ற முதலமைச்சர் கிடைத்திருக்கின்றார்

ஒரு வெளிப்படை தன்மை நிறைந்த அரசாங்கம் நடைபெறுகிறது

அன்றாடம் என்ன நடக்கிறது என்று கணக்கு கேட்டு கணக்கு பார்க்கின்ற அரசாங்கமாக இந்த அரசாங்கம் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் விரும்புகிறார்

அது சட்டசபையா இருந்தாலும் சரி வெளியாக இருந்தாலும் சரி

ஊழலற்ற லஞ்ச லாவண்யம் இல்லாத அரசை அமைப்பேன் என்று உறுதியாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

எம்எல்ஏவாக இருந்தாலும் எம்பி ஆக இருந்தாலும் அனைத்து கட்சியினரும் வணிகர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்

வணிகர்கள் அரசாங்கத்திற்கு செலுத்தி கொண்டிருக்கின்ற வரியை வைத்து மக்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது

அப்பொழுதெல்லாம் அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் அனுபவிப்பார்கள் என்று சொல்வார்கள்

ஆனால் இப்பொழுது அப்பப்போ அனுபவித்து விடுகிறார்கள்

என்ன செய்தார்கள் யார் எப்படி நடந்தார்கள் என்ன நடந்து கொண்டு இருக்கிறது இன்று

வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரியும்

ஜாதி மத இனம் மொழி பாகுபாடில்லாமல் அனைவருக்கும் பாதுகாப்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும்

ஆயிரம் விளக்கு தொகுதியில் நான் வெற்றி பெற்ற பிறகு அமைச்சராக ஆக வேண்டும் என நண்பர்கள் விரும்பினார்கள்

எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்திலே நீ அமைச்சராக இருக்க வேண்டும் ஆகல

அதனால இப்பவாது அமைச்சராக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்

ஆனால் முதலமைச்சர் சட்டப்பேரவை சபாநாயகராக பதவி அளித்து பிடித்திருக்கிறதா என்று கேட்டு சபாநாயகர் பதவி கொடுத்தார்

யார் மனமும் புண்படாமல் ஒவ்வொருவருக்கும் அளிக்கும் மரியாதையை அடிப்படை உள்ளத்தில் கொண்டு

சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஆக இருந்தாலும் எதிர்க்கட்சி பொறுப்பில் இருப்பவர்களுக்கும் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பொறியியல் கல்லூரிகள் கலை அறிவியல் கல்லூரிகள் அதிகமாக இருக்கின்றன

ஆனால் அதற்கேற்ற வேலை இல்லாமல் இருக்கிறது எல்லா மாநிலத்தை காட்டிலும் தமிழகத்தில் தான் அதிக பொறியியல் கல்லூரிகள்இருக்கின்றன
ஆனால் படிப்புக்கேற்ற வேலை இல்லை என்ற கவலை இருக்கிறது

கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு பெற்றோர்கள் படிக்க வைக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கான உத்தரவாதம் வேண்டும்

அதை நினைத்துப் பார்க்கின்ற முதலமைச்சர் இன்று இருக்கிறார்

படித்த உடனே வேலை கிடைக்க வேண்டும் வேலை கிடைக்காவிட்டால் அவர்களுக்கு உதவி தேவை வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்

சட்டசபையில் முதலமைச்சர் பேசவே மாட்டேங்கிறார் என்று அனைவரும் கேட்கிறார்கள்

என்ன பேச வேண்டும் அடுக்கு மொழியில் பேசுவது மட்டும் தான் அரசியலா

பேசாமல் இருந்தால் கூட மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டிய திட்டங்களை சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்

அதன் அடையாளம் தான் தாய்மாமன் தங்க மோதிர திட்டம்

மேலும் சிங்கப் பெண்ணே திட்டத்தை கொண்டு வந்தார்

விவசாய கடன் ஆட்சி அமைந்து நான்கு மாதம்தான் ஆக்கியிருக்கிறது

இன்னும் இருக்க வேண்டிய காலங்கள் நிரம்ப இருக்கிறது

எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் பல வியக்கத்தக்க முன்னேற்றங்கள்

கல்வித்துறை மருத்துவத்துறையில் எதிர்காலத்தில் உத்தரவாதமான குறைந்தபட்ச ஊதியம் பெறுகின்ற குறைந்தபட்சம் வாய்ப்புகளை பெறுகின்ற காலம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது

அதற்காக முதலமைச்சர் நாள் தோறும் உழைத்துக் கொண்டிருக்கிறார்

கள்ளம் கபடம் அற்ற உள்ளதோடு சட்டசபையில் பேசுகிறார்

சட்டசபை நேரலையை நிறுத்தக்கூடாது என மக்கள் கேட்கிறார்கள் பல இளைஞர்கள் ஓட்டு போடுவது தான் வேலை என எண்ணுகிறார்கள்

அப்பொழுது எல்லாம் சட்டசபையில் அமளி எதிர்க்கட்சிகள் குண்டு கட்டாக வெளியேற்றம் என்ற செய்தி தான் வரும்

ஆனால் இன்று நேரலையை பார்த்து சட்டசபையில் நடைபெறும் நியாயத்தை கேட்கிற அளவுக்கு மக்கள் தயாராகி விட்டார்கள்

எந்த காலத்திலும் சட்டப்பேரவை நேரலையை நிறுத்தப்படக்கூடாது பேரவை தலைவர் என்ற முறையில்நானும் உறுதியாக இருக்கின்றேன் என்று தெரிவித்தார்

error: Content is protected !!