Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெண்களின் உரிமைக்கு எதிராக தீர்மானம்- ஆதரிக்க மாட்டோம்.. பாமக எம்எல்ஏ

பெண்களின் உரிமைக்கு எதிராக தீர்மானம்- ஆதரிக்க மாட்டோம்

தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க முடியாது என பேரவையில் பாமக கூறியுள்ளது. தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் மீது பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார், ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் 14 முதல் 18 லட்சம் வரை வாக்காளர்கள் உள்ளனர்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக முன்பு திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் தவெக உள்பட அனைத்துக் கட்சிகளும் பங்கேற்றன. அப்போது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதென்றால் பாமக எதிர்க்கும் என அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதென்றால் எதிர்க்கலாம் என்ற அடிப்படையிலேயே திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விகிதாச்சார அடிப்படையில் 7.18% பிரதிநிதித்துவம் குறையகூடாது என்றும் கணேஷ்குமார் குறிப்பிட்டார். தொகுதி மறுவரையறை குறித்து சில மாதங்களுக்கு முன் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அனைத்து மாநிலங்களுக்கும் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை 50% உயர்த்தப்பட்டு, கூடுதல் தொகுதிகள் மகளிருக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தென் மாநிலங்களில் மக்களவை தொகுதி எணணிக்கை குறைக்கப்படாது என பிரதமரும் உறுதி அளித்துள்ளார். எம்.பி.க்கள் எண்ணிக்கை 50% உயர்ந்தால் தமிழ்நாட்டில் இருந்து 20 பெண் எம்.பிக்கள் கூடுதலாக நாடாளுமன்றம் செல்வார்கள். இந்த சூழலில் பெண்களின் உரிமைக்கு எதிரான தீர்மானம் என்பதால் பாமக எதிர்க்கிறது. ஒன்றிய அரசு இந்த சட்டத்தைக் கொண்டு வருமா, வராதா என்ற சூழ்நிலையில், செவிவழி செய்தியை வைத்துக் கொண்டு இந்த தீர்மானத்தைக் கொண்டு வருவதன் அவசியம் என்ன..? எனவே முதல்வர் விஜய் அவர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும் என கணேஷ்குமார் வலியுறுத்தினார்.

error: Content is protected !!